நிலக்கடலை சாகுபடிக்கு ஏற்ற பொருத்தமான டிராக்டரை தேர்வு செய்தல்
நிலக்கடலை அல்லது வேர்க்கடலை பயிர் இந்தியாவின் ஆந்திரா, குஜராத், தமிழ்நாடு, கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய ஐந்து மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. இந்த பிராந்தியங்கள் ஒவ்வொன்றும் வேறுபட்ட தன்மைக் கொண்டதாகையால, பயிரானது வேவ்வேறு தன்மைக் கொண்ட மண்ணில் பயிரிடப்படுகிறது, மேலும் ஒவ்வொரு பிராந்தியத்திலும் கண்ணும் கருத்துமாய் கவனத்துடன் விவசாயம் செய்யப்படுகிறது. ஆக கவனத்துடன் விவசாயம் மேற்கொள்ள பல வேளாண் கருவிகள், உரங்களை பயன்படுத்த வேண்டும் மற்றும் பயிருக்கு தக்க நேரத்தில் சரியான வேளாண் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இந்தப் பணிகளை அனைத்து டிராக்டர்களாலும் அவ்வளவு எளிதில் செய்துவிட முடியாது, மேலும் நிலக்கடலை சாகுபடிக்கு தேவைப்படும் அனைத்துப் பணிகளையும் செய்யக்கூடிய ஒரு டிராக்டரை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த கட்டுரையில் உங்கள் நிலக்கடலை சாகுபடிக்கு சிறந்த இந்திய டிராக்டரை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
சரியான டிராக்டரைத் தேர்ந்தெடுப்பது ஏன் முக்கியம்
ஒரு நிலக்கடலை டிராக்டர் பல விவசாயப் பணிகளை சாத்தியமாக்குகிறது மற்றும் எளிமையாக்குகிறது, ஆனால் இந்தக் காரணிகளை மட்டுமே மனதில் கொண்டு நீங்கள் ஒரு டிராக்டரைத் தேர்ந்தெடுக்கக் கூடாது.
நிலக்கடலை சாகுபடிக்கு ரோட்டவேட்டர் மற்றும் பிளான்ட்டர் போன்ற கனமான விவசாய கருவிகள் தேவைப்படுகின்றன, இது அதிக சக்தி கொண்ட எஞ்சின் மற்றும் குறிப்பிடத்தக்க PTO சக்தியால் இயங்குகின்றன. ஒரு சிறந்த டிராக்டர் நல்ல பயிர் வளர்ச்சிக்கு மண்ணின் தன்மையைப் பராமரிப்பதோடு கனமான கருவிகளை எளிதாகப் பயன்படுத்த உங்களுக்கு உதவுகிறது.
வேர்க்கடலை சாகுபடியில் விதைப்பு மற்றும் தோண்டும் பணிகளுக்கு துல்லியமான ஹைட்ராலிக்ஸ் இன்றியமையாததாகும். மஹிந்திரா XP பிளஸ் மற்றும் யுவோ ரகங்கள் துல்லியமான ஹைட்ராலிக்ஸை வழங்குகின்றன, இது வேர்க்கடலை சாகுபடிக்கு ஏற்றது. விவசாய கருவிகள் மற்றும் விவசாய உபகரணங்களை ஏற்றிக்கொண்டு நிலத்தின் வழியாக எடுத்துச் செல்லும் போது ஒரு டிராக்டருக்கு போதுமான பேக்கப் டார்க் மற்றும் சரியான வகை அச்சு மற்றும் சக்கரங்கள் தேவைப்படுகிறது. வேறு என்ன கூடுதலாக தேவைப்படுகிறது, நிலக்கடலை சாகுபடிக்கான சரியான டிராக்டர் வியர்வையை சிந்தாமல், நம்பகத்தன்மையுடன் எரிபொருளை மிச்சப்படுத்தி இந்த பணிகளைச் செவ்வனே செய்து முடிக்க வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, சரியான நிலக்கடலை சாகுபடி டிராக்டர் உங்கள் விவசாய பணிகளை எளிதாக்குகிறது, இது உங்கள் உழைப்பு, நேரம் மற்றும் உற்பத்தி செலவை மிச்சப்படுத்துகிறது, இறுதியில், நல்ல மகசூலையும் வழங்குகிறது.
நிலக்கடலை சாகுபடிக்கு மஹிந்திரா டிராக்டர்கள்
சந்தையில் நூற்றுக்கணக்கான டிராக்டர்கள் இருந்தாலும், பெரும்பாலான டிராக்டர்களால் நிலக்கடலை சாகுபடியில் உள்ள சவால்களை கையாள முடியாது. அதிர்ஷ்டவசமாக, மஹிந்திரா டிராக்டர்கள் மற்றும் விவசாய உபகரணங்களால் அனைத்து சவால்களையும் முறியடிக்க முடியும். வேறு எந்த டிராக்டரையும் போலல்லாமல், எங்கள் நிலக்கடலை டிராக்டர் அதிக PTO சக்தி, சக்திவாய்ந்த எஞ்சின், துல்லியமான ஹைட்ராலிக்ஸ், நம்பகத்தன்மை மற்றும் உறுதித்தன்மையை வழங்குகிறது. நிலக்கடலை சாகுபடிக்கான இரண்டு சிறந்த மஹிந்திரா டிராக்டர்கள் உங்களுக்காக இங்கே.